என் மலர்
செய்திகள்
X
முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்த மோடி
Byமாலை மலர்14 Sept 2017 4:16 PM IST (Updated: 14 Sept 2017 4:17 PM IST)
குஜராத் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்வர் கேசுபாய் படேலின் வீட்டுக்கு சென்று அவரது மகனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல். இவரது மகன் பிரவீன் படேல் (60), அமெரிக்காவில் வசித்து வந்தார். கடந்த 9-ம் தேதி பிரவீன் படேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
இந்நிலையில், புல்லட் ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று குஜராத் வந்தார். அப்போது அவர் முன்னாள் முதல்வர் கேசுபாய் வீட்டுக்கு சென்றார். அவரது மகனின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிடுகையில், கேசுபாய் வீட்டுக்கு சென்றேன். அவரது மகன் பிரவீன் படேலின் எதிர்பாராத மரணத்துக்கு எனது இரங்கலை தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரவீன் படேலின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் கேசுபாய் வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
×
X