என் மலர்
செய்திகள்
X
காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய நாராயண் ரானே
Byமாலை மலர்2 Oct 2017 7:36 AM IST (Updated: 2 Oct 2017 7:36 AM IST)
காங்கிரசில் இருந்து விலகிய நாராயண் ரானே ‘மஹாராஸ்டிரா சுவாபிமான்’ என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.
மும்பை :
மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியில் இருந்தபோது (1999-ம் ஆண்டு) முதல்- மந்திரியாக இருந்தவர் நாராயண் ரானே. கொங்கன் பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவர் ஆவார். இவர், உத்தவ்தாக்கரேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனாவில் இருந்து விலகினார். 2005-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இந்தநிலையில் அக்கட்சியிலும் முன்னாள் முதல்- மந்திரி அசோக் சவானுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2015-ம் ஆண்டு மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவராக அசோக் சவான் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து நாராயண் ரானே கட்சியில் இருந்து விலகியே இருந்தார்.
இந்தநிலையில் அவர் பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்டினார். எனவே அவர் பா.ஜனதாவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நாராயண் ரானே கடந்த திங்கட்கிழமை டெல்லியில் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
இந்தநிலையில் நாராயண் ரானேயை கட்சியில் சேர்க்க கூடாது என கூட்டணி கட்சியை சேர்ந்த சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே பா.ஜனதாவிற்கு நேரடியாக அழுத்தம் கொடுத்து வந்தார்.
எனவே நாராயண் ரானே நேரடியாக பா.ஜனதாவில் இணைவதில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ‘மஹாராஸ்டிரா சுவாபிமான்’ என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளதாக நாராயண் ரானே நேற்று அறிவித்தார். இது குறித்து நாராயண் ரானே நரிமன்பாயிண்ட்டில் அளித்த பேட்டியில் கூறுகையில், “மக்கள் நலன் சார்ந்த பணிகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றுவதே எங்கள் கட்சியின் நோக்கம். பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து சிவசேனாவை கடுமையாக விமர்சித்து பேசிய நாராயண் ரானே புல்லட் ரெயில் திட்டத்தை வரவேற்று பேசினார். இது குறித்து அவர் கூறுகையில், “புல்லட் ரெயில் திட்டம் வளர்ச்சிக்கான திட்டம். இந்த திட்டம் செல்போனை போன்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.
முன்னதாக நாராயண் ரானே தனிக்கட்சி தொடங்கியதை அவரது சொந்த மாவட்டமான சிந்துதுர்க்கில் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இசை வாத்தியங்கள் முழங்க இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பா.ஜனதாவில் கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்க தயக்கம் காட்டியதால் தான் நாராயண் ரானே புதிய கட்சி தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

Next Story
×
X