என் மலர்
செய்திகள்
X
இட ஒதுக்கீடு தொடர்பாக காங். கட்சிக்கு நிபந்தனை விதிக்கும் ஹர்திக் படேல்
Byமாலை மலர்29 Oct 2017 7:32 AM IST (Updated: 29 Oct 2017 7:32 AM IST)
குஜராத் சட்டசபை தேர்தலில் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நிலைப்பாட்டை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும் என ஹர்திக் பட்டேல் நிபந்தனை விதித்துள்ளார்.
அகமதாபாத்:
குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால், தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளுக்கும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க இடையே இங்கு நேரடி போட்டி உள்ளது.
ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை எட்டிப்பிடிக்க காங்கிரஸ் கட்சியும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன. இம்மாநில தேர்தலில் சாதி ஓட்டுகள் முக்கிய பங்காற்றும் என்பதால் இரு கட்சிகளும் சாதி தலைவர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
பட்டேல் சாதிக்கு முறையான இடஒதுக்கீடு, வேலை வாய்ப்புகள் வழங்கவில்லை எனக்கூறி கடந்தாண்டு குஜராத்தில் பேரணி மற்றும் போராட்டம் நடத்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர் ஹர்திக் பட்டேல். பட்டேல் சமுதாய வாக்குகளை கைவசம் வைத்துள்ள இவரை தன்வசப்படுத்த பா.ஜ.க எவ்வளவோ முயன்றும் நிறைவேற வில்லை.
பா.ஜ.க.வையும் பிரதமர் மோடியையும் ஹர்திக் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால், அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பார் என அரசியல் நோக்கர்கள் கருதிய நிலையில், அக்கட்சிக்கு அவர் புதிதாக நிபந்தனை விதித்துள்ளார்.
பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை நவம்பர் 3-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என அவர் கெடு விதித்திருக்கிறார். இதற்குள் முடிவு எடுக்கப்படாவிட்டால் பா.ஜ.க.வைப போல காங்கிரஸ் கட்சியையும் எதிர்க்கும் முடிவினை பட்டேல் போராட்டக்குழுவினர் எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
×
X