search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமை: ப.சிதம்பரம் கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்
    X

    காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமை: ப.சிதம்பரம் கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்

    காஷ்மீரில் பெரும்பாலான மக்கள் தன்னாட்சி உரிமையை விரும்புகிறார்கள் எனக்கூறிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    சமீப காலமாக காஷ்மீரில் அதிகரித்து வரும் பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மாநில அரசுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அங்கு பயணம் மேற்கொண்டனர். அங்குள்ள மக்களுடன் பேசி அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.



    இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், காஷ்மீரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தன்னாட்சி உரிமையை விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார். அவரது கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற பாஜகவினர் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமை அளிக்க வேண்டும் என ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருவது அவமானமாக இல்லையா என கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×