என் மலர்
செய்திகள்
X
மத்தியப் பிரதேசத்தில் சிறப்பு ஆயுதப்படை வீரர் தற்கொலை
Byமாலை மலர்1 Nov 2017 5:30 PM IST (Updated: 1 Nov 2017 5:30 PM IST)
மத்தியப் பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தில் பணியில் இருக்கும் போது சிறப்பு ஆயுதப்படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போபால்:
மத்தியப் பிரதேசத்தில் சிறப்பு ஆயுதப்படை வீரராக பணியாற்றி வந்தவர் அசோக் சிங் சவுகான். இவர் தாட்டியா மாவட்டத்தில் பணியாற்றி வந்தார்.
இன்று அங்குள்ள ஓய்வு இல்லத்தில் பணியில் இருந்த அவர் திடீரென ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவர் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அசோக் தற்கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பணியில் இருக்கும் போது சிறப்பு ஆயுதப்படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
×
X