என் மலர்
செய்திகள்
X
100 ஆண்டுகளில் முதன்முறையாக பெண் மேயரை பெற உள்ள லக்னோ மாநகராட்சி
Byமாலை மலர்24 Nov 2017 9:07 PM IST (Updated: 24 Nov 2017 9:07 PM IST)
உத்தரப்பிரதேசம் மாநில தலைநகராக உள்ள லக்னோ மாநகராட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் முதன் முறையாக பெண்களுக்கு மேயர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகராக உள்ள லக்னோ, கடந்த 1916-ம் ஆண்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. நவாப்களின் நகரம் என்றழைக்கப்படும் லக்னோவின் முதல் தலைவராக சையது நபியுல்லா பொறுப்பேற்றார்.
இதனையடுத்து, 1948-ம் ஆண்டு உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் முறையை ரத்து செய்து விட்டு அதிகாரிகளை நியமிக்கும் முறை கொண்டு வரப்பட்டது.
இதன் பின்னர், பல்வேறு மாறுதல்கள் லக்னோ மாநகராட்சியில் நடந்தாலும் ஒரு முறை கூட பெண் மேயர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ளட்சி தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. லக்னோ மாநகராட்சி 100 ஆண்டுகளையும் நிறைவடைந்த நிலையில் மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். நகராட்சி சட்டம் 1959-ன் படி உள்ளாட்சி பதவிகளில் பெண்கள், பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர் என இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story
×
X