என் மலர்
செய்திகள்
X
ராஜஸ்தான்: முன்னாள் ஜனாதிபதி வந்த விமானத்துக்கு அனுமதி மறுப்பு: 43 நிமிடம் வானில் சுற்றியது
Byமாலை மலர்6 Feb 2018 4:43 AM IST (Updated: 6 Feb 2018 4:43 AM IST)
ராஜஸ்தான் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பயணித்த விமான தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் சுமார் 43 நிமிடங்கள் விமான நிலைய வான் எல்லையில் பறந்தது. #JetAirwaysflight #FormerPresident #PratibhaPatil
ஜெய்ப்பூர்:
முன்னாள் ஜனாதிபதியான பிரதிபா பாட்டீல் இந்தூர் நகரில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்துள்ளார். அந்த விமானத்தில் அவருடன் சேர்த்து சுமார் 68 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
ஆனால் அந்த நேரத்தில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் பழுது பார்க்கும் பணி நடந்துள்ளது. இதன் காரணமாக அந்த விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த விமானம் சுமார் 43 நிமிடங்கள் வானத்தில் சுற்றியுள்ளது. இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் பல்ஹாரா கூறுகையில், இந்த விமான நிலையத்தில் இன்று பிற்பகல் 2.20 முதல் 3.20 வரை விமானிகள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பயணித்த விமானம் பிற்பகல் 2.42 மணிக்கு வந்ததால் விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் வானிலேயே 3.25 வரை பறந்தது. பிரதிபா பாட்டீலுடன் அந்த விமானத்தில் 68 பேர் பயணித்தனர். பழுதுபார்க்கும் பணி முடிந்ததும் முன்னுரிமை அளிக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டது, என்று தெரிவித்தார். #JetAirwaysflight #FormerPresident #PratibhaPatil #tamilnews

Next Story
×
X