என் மலர்
செய்திகள்
மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கெடு
ஐதராபாத்:
ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதால் ஆந்திராவின் வளர்ச்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று ஆந்திரா முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்..
இதற்காக அவர் 42 தடவை டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளுடன் பேசினார். ஆனால் ஆந்திராவுக்கு எந்த சிறப்பு நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை.
கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்ட போது சிறப்பு நிதி கிடைக்கும் என்று சந்திரபாபு நாயுடு எதிர்பார்த்தார். ஆனால் மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு எந்த சிறப்பு நிதியும் கிடைக்கவில்லை. அது மட்டுமின்றி புதிய திட் டங்களும் கிடைக்கவில்லை.
விசாகப்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய ரெயில்வே மண்டலம் உருவாக்க சந்திர பாபு நாயுடு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த சந்திரபாபு நாயுடு பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக ஆலோசனை நடத்தி னார். மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சமரசம் செய்ததால் சந்திரபாபு நாயுடு அதிரடி முடிவு எதையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் மத்திய அரசுக்கு ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு புதிய கெடு ஒன்று விதித்துள் ளார். அதில் அவர், தற் போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெறுவதற்கு முன்பு சிறப்பு நிதியை ஒதுக்கி அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ஐதரா பாத்தில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போதும், பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் வரை பொறுத்திருக்கலாம் என்று சந்திரபாபு நாயுடு கூறியதாக தெரிகிறது. இத னால் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகு பா.ஜ.க.- தெலுங்கு தேசம் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசிடம் சந்திர பாபு நாயுடு ரூ.12,500 கோடிக்கு சிறப்பு நிதியை கேட்டு வருகிறார். 2014-15-ம் ஆண்டு ஏற்பட்ட வருவாய் இழப்புக்காக ரூ.3,500 கோடி, அமராவதியில் புதிய தலைநகரம் கட்ட ரூ.5000 கோடி, பொலாவரம் திட்டத் துக்காக ரூ.4 ஆயிரம் கோடி கேட்டு வருகிறார்.
இவை தவிர நபார்டு வங்கியில் இருந்து ரூ.16,000 கோடி கடன் வாங்க மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் சந்திர பாபு நாயுடு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். #unionbudget #ChandrababuNaidu #tamilnews