என் மலர்
செய்திகள்
X
மகாத்மாவின் கனவை மூன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றியவர் மோடி: பா.ஜ.க. எம்.பி.
Byமாலை மலர்6 Feb 2018 3:59 PM IST (Updated: 6 Feb 2018 3:59 PM IST)
மகாத்மாவின் கனவை மூன்றரை ஆண்டுகளில் பிரதமர் மோடி நிறைவேற்றியிருப்பதாக மக்களவையில் பா.ஜ.க. எம்.பி. பேசினார்.
புதுடெல்லி:
மக்களவையில் இன்று ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. எம்.பி. ராகேஷ் சிங், பல்வேறு துறைகளில் மத்திய அரசு சாதனைகள் செய்திருப்பதாக குறிப்பிட்டார். குறிப்பாக தூய்மை இந்தியா திட்டம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்து அவர் பேசினார்.
“55 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தது. ஆனால், காந்தியின் தூய்மை இந்தியா கனவை நிறைவேற்றவில்லை. ஆனால், நாம் மூன்றரை ஆண்டுகளில் காந்தியின் கனவை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 5.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
நமது அரசாங்கத்தில் ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு மதமும் சமம். வளர்ச்சி பணிகளில் எதிர்க்கட்சிகளும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என கருதுகிறோம். மதம், சாதி மற்றும் சமயங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களுக்கும் நலன்களை மோடி அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது” என்றார் ராகேஷ் சிங். #tamilnews

Next Story
×
X