என் மலர்
செய்திகள்
X
நிரவ்மோடியின் ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கம்: 9 சொசுகு கார்கள் பறிமுதல்
Byமாலை மலர்22 Feb 2018 2:56 PM IST (Updated: 22 Feb 2018 2:56 PM IST)
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் ரூ.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டது. இதே போல அவரது 9 சொகுசு கார்களையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மும்பை:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைரவியாபாரி நிரவ்மோடி ரூ.11,500 கோடி மோசடி செய்தது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இப்போது வருமான வரித்துறையினரும் இதில் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் நிரவ்மோடி மற்றும் அவரது நிறுவனம் மூலம் உள்ள வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அவருடைய 141 வங்கி கணக்குகளை முடக்கினார்கள். இதில் ரூ.145 கோடி அளவுக்கு பணம் முடக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. அதிகாரிகள் நிரவ்மோடி நிறுவனத்தில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இதேபோல அமலாக்கத்துறையினரும் தனியாக சோதனை நடத்துகின்றனர். தற்போது 17 இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
ஏற்கனவே அவருடைய வைர நிறுவனங்கள் மற்றும் நகைக்கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.5714 கோடி அளவிற்கு வைரங்கள், நகைகள் மற்றும் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து நடந்து வரும் சோதனையில் மேலும் பல கோடி ரூபாய் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
இதுவரை கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மதிப்பு பற்றிய விவரங்களை கணக்கெடுத்து வருகிறார்கள். இந்த பணி முடிவதற்கு இன்னும் ஒருவார காலம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பை ஒர்லியில் உள்ள நிரவ் மோடியின் மனைவி அமிமோடிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புக்கு சீல் வைத்தனர். இப்போது நிரவ்மோடியின் பண்ணை வீட்டுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பண்ணை வீடு மும்பைக்கு அருகே உள்ள அலிபார்க் என்ற இடத்தில் உள்ளது.
1½ ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரமாண்டமாக இந்த வீடு அமைந்துள்ளது. வீடு மட்டுமே 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 5 படுக்கை அறைகள், நீச்சல் குளம் ஆகியவையும் அதில் உள்ளன. இந்த வீட்டை நிரவ்மோடி 2004-ம் ஆண்டு தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து ரூ.32 கோடிக்கு வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் நிரவ் மோடியின் ரூ.94 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டது.
மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்குகளில் அவர் செய்த முதலீடுகளை முடக்கி அமலாக்கத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதே போல அவரது 9 சொகுசு கார்களையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். #Tamilnews

Next Story
×
X