search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி சிதம்பரத்தை சிக்க வைத்த இந்திராணி வாக்குமூலம்
    X

    கார்த்தி சிதம்பரத்தை சிக்க வைத்த இந்திராணி வாக்குமூலம்

    ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைதாவதற்கு பீட்டர் முகர்ஜி-இந்திராணி முகர்ஜி தம்பதி, அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலங்களே காரணமாக இருந்துள்ளன. #KartiChidambaram #IndraniMukerjea
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைதாவதற்கு அந்த நிறுவனத்தின் இயக்குனர்களான பீட்டர் முகர்ஜி-இந்திராணி முகர்ஜி தம்பதி, அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலங்களே காரணமாக இருந்துள்ளன.



    அந்த வாக்குமூலங்களில் இருவரும் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2007-ம் ஆண்டு, அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை அவரது வடக்கு பிளாக் அலுவலகத்தில் சந்தித்தோம். எங்கள் நிறுவனம், வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கான ஒப்புதலை அளிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.

    அதற்கு அவர், கார்த்தி சிதம்பரத்தின் வர்த்தகத்துக்கு உதவுமாறும், அதற்காக வெளிநாட்டு பணத்தை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னதால், டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தோம். அவர் 10 லட்சம் அமெரிக்க டாலர் கேட்டார். பின்னர், கார்த்தி தொடர்புடைய வெளிநாட்டு வங்கி கணக்குகளில் 7 லட்சம் டாலர் செலுத்தினோம். அது, எங்கள் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடு கிடைக்க ஒப்புதல் அளித்ததற்கு பிரதிபலனாக அளித்த பணமாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.  #KartiChidambaram #IndraniMukerjea #tamilnews 
    Next Story
    ×