என் மலர்
செய்திகள்
X
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு - சி.பி.ஐ விசாரணை வளையத்தில் ப. சிதம்பரம் ?
Byமாலை மலர்1 March 2018 3:42 PM IST (Updated: 1 March 2018 3:42 PM IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைதாகியுள்ள நிலையில், அவரது தந்தை ப.சிதம்பரத்தை விசாரிக்க சி.பி.ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #KartiChidambaram
புதுடெல்லி:
மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் தடையில்லா சான்றிதழ் விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் முறைகேடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்போது மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது, அந்த செல்வாக்கை பயன்படுத்தி அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கார்த்தி சிதம்பரம் கடும் நெருக்கடி கொடுத்து இந்த முறைகேட்டை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கு கமிஷன் கட்டணமாக ரூ.10 லட்சத்தை கார்த்தி சிதம்பரம் பெற்றதாக கூறப்பட்டது. இதற்கான ஆவணத்தை ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.
இதற்கிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, பிரீத்தம் முகர்ஜியை கார்த்தி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு பல்வேறு முறைகேடுகளை செய்ததாக சி.பி.ஐ. கருதுகிறது. குறிப்பாக ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் பணப்பரிமாற்றம் முழுவதையும் கார்த்தி சிதம்பரம் மறைமுகமாக கட்டுப்படுத்தி வந்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் நினைக்கிறார்கள்.
இதற்கிடையே ஐ.என்.எகஸ் நிறுவனம் மத்திய நிதி அமைச்சகம் மற்றும் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெறாமல் ரூ.305 கோடி பெற்றது குறித்து இந்திராணி முகர்ஜி, சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளிந்திருந்தார். அந்த வாக்குமூலம்தான் கார்த்தி சிதம்பரம் செய்த முறைகேடுகளை உறுதிப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்தே சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மிகவும் திட்டமிட்டு கார்த்தி சிதம்பரத்தை நேற்று கைது செய்தனர்.
கார்த்தி சிதம்பரம் கைதான தகவல் அறிந்ததும் வெளிநாட்டில் இருந்த ப.சிதம்பரம் உடனடியாக நாடு திரும்பினார். இன்று கார்த்தி சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிதம்பரமும் கோர்ட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், இந்திராணி முகர்ஜி தனது வாக்குமூலத்தில் சிதம்பரத்தின் பெயரை குறிப்பிட்டு இருந்ததாகவும், இதனால் அவரை விசாரிக்க சி.பி.ஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறுகையில், “கார்த்தியை சட்டம் வளைத்துள்ளது. சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விரைவில் சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். #KartiChidambaram #INXMediaCase #TamilNews

Next Story
×
X