என் மலர்
செய்திகள்
X
மகாத்மா காந்தி எழுதிய 92 ஆண்டுகள் பழமையான கடிதம் ஏலம்
Byமாலை மலர்1 March 2018 6:01 PM IST (Updated: 1 March 2018 6:01 PM IST)
மகாத்மா காந்தி அமெரிக்காவில் உள்ள தனது நண்பருக்கு எழுதிய 92 ஆண்டுகள் பழமையாக கடிதம் ஏலம் விடப்பட உள்ளது.
வாஷிங்டன்:
மகாத்மா காந்தி 1926-ம் ஆண்டு எழுதிய கடிதம் தற்போது அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ளது. இக்கடிதம் காந்தி இந்தியாவில் உள்ள தனது சபர்மதி ஆசரமத்தில் இருக்கும் போது அமெரிக்காவில் இருந்த தனது நண்பரும், கிறிஸ்துவ தலைவருமான மில்டன் நியூபெரி பிரான்சிற்கு எழுதியுள்ளார்.
இந்து மதத்தைச் சேர்ந்த காந்தி எழுதிய இக்கடிதம் சமாதானத்திற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கியது. அவர் அக்கடிதத்தில் கிறிஸ்துவ கடவுளான இயேசுவை குறித்து எழுதியுள்ளார்.
இந்நிலையில், நாதன் ராப் என்பவரால் சேகரிக்கப்பட்ட ராப் தொகுப்பில் பாதுகாக்கப்பட்ட இக்கடிதம் தற்சமயம் ஏலம் விடப்பட உள்ளது. இது 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 92 ஆண்டுகள் பழமையான அந்த கடிதத்தில் காந்தியின் கையோப்பம் அழியாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளது. #tamilnews

Next Story
×
X