என் மலர்
செய்திகள்
X
தெலுங்கானா ரெயில் நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பிடிபட்டது
Byமாலை மலர்3 March 2018 3:57 PM IST (Updated: 3 March 2018 3:57 PM IST)
தெலுங்கானா மாநிலம், தெனாலி ரெயில் நிலையத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்றரை கிலோ கடத்தல் தங்கத்தை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலி நோக்கி வரும் ரெயிலில் தங்கம் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தெனாலி நோக்கி வந்த ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சேஷாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த இருவரிடம் இருந்து மூன்றரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ராஜமுந்திரி பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை பணியாளர்களான துதே அனிஜ்பாபு மற்றும் பிரகலபதி பிரபாகர ராவ் ஆகியோர் சென்னையிலிருந்து உரிய ரசீதுகள் இல்லாமல் இந்த தங்கத்தை கடத்தி வந்ததாக குறிப்பிட்ட போலீசார் நேற்று நள்ளிரவில் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Next Story
×
X