என் மலர்
செய்திகள்
X
பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரசுடன் இணைந்து செயல்பட தயார் - மம்தா பானர்ஜி அறிவிப்பு
Byமாலை மலர்8 July 2018 9:38 AM IST (Updated: 8 July 2018 9:38 AM IST)
மேற்குவங்காள முதல்- மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பா.ஜனதாவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். #MamataBanerjee
கொல்கத்தா:
காங்கிரஸ் தலைமையைப் பொருத்தவரையில் ராஜிவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அக்கட்சியின் தற்போதைய தலைவரான ராகுல்காந்தி இளையவர் என்பதால் அவர் குறித்து என்னால் எதுவும் கூற இயலாது.
சாதாரண அரசியல் வாதியாக இருந்த நான் பல போராட்டங்களுக்கு பிறகு மூத்த அரசியல் வாதியாகியுள்ளேன். 7 முறை எம்.பி.யாகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2 முறை முதல்வராகவும் இருந்திருக்கிறேன்.
எந்த ஒரு கட்சியின் நோக்கம், சித்தாந்தம், கொள்கை ஆகியவை தெளிவாக இருக்கும் பட்சத்தில் அந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவருடனும் இணைந்து செயல்படுவதே எனது நோக்கமாகும்.
பா.ஜனதா அராஜகம் செய்வதோடு மக்களை துன்புறுத்துகிறது. பா.ஜனதாவைச் சேர்ந்த சிலரே அந்தக் கட்சியை ஆதரிப்பதில்லை. 100 ஹிட்லர்கள் சேர்ந்தார்போல் செயல்படுகிறது. அக்கட்சியை வீழ்த்த காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை.
ஆனால் கூட்டணி கூட்டாட்சியை பொருத்த வரையில் அது எனது தனிப்பட்ட முடிவாக இருக்காது. அது அனைத்து மாநிலக் கட்சிகளின் முடிவாகவும் இருக்க வேண்டும். சில மாநில கட்சிகள் தங்களது மாநிலத்தில் இருக்கும் நெருக்கடி காரணமாக காங்கிரசுக்கு ஆதரவு அளிக்காமல் இருக்கலாம். அவர்கள் மீது நான் குற்றம் சுமத்தவில்லை.
மாறாக பா.ஜனதாவுக்கு எதிராக இணைந்து பணியாற்றுவோம் என்றுதான் கூறுகிறேன். ஒரு சில இடங்களில் காங்கிரசுக்கு செல்வாக்கு இருக்கலாம். ஒரு சில இடங்களில் மாநில கட்சிகள் அதிகாரம் படைத்ததாக இருக்கலாம். அதற்கு ஏற்ப முன்னுரிமை அளிப்போம்.
எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணி ஏற்பட சாத்தியக் கூறுகள் உள்ளன. 75 தொகுதிகளில் பொது வேட்பாளர்நிறுத்தப்படும் பட்சத்தில் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சாதகமாக மாறும்.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பா.ஜனதாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார். #BJP #Congress #MamataBanerjee

Next Story
×
X