என் மலர்
செய்திகள்
X
182 மீட்டர் உயர பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை- பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
Byமாலை மலர்13 Oct 2018 10:30 AM IST (Updated: 13 Oct 2018 10:30 AM IST)
குஜராத்தில் நர்மதா அணை பகுதியில் கட்டப்பட்ட 182 மீட்டர் உயர பிரமாண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை வருகிற 31-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். #PMModi #SardarVallabhbhaiPatel
காந்திநகர்:
இந்தியாவின் முதல் துணை பிரதமராக பதவி வகித்தவர் சர்தார் வல்லபாய் படேல்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆங்காங்கே துண்டு, துண்டாக கிடந்த சமஸ்தானங்களை கையகப்படுத்தி ஒன்றுபட்ட இந்தியா உருவாக வழி வகுத்தார். இதனால் இவருக்கு “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்ற சிறப்பு ஏற்பட்டது.
சர்தார் வல்லபாய் படேலுக்கு மத்தியில் நீண்ட நாட்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி உரிய சிறப்பு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக, மிக உயரமான, பிரமாண்ட சிலை அமைக்க கடந்த 2013-ம் ஆண்டு குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி அறிவித்தார்.
இதையடுத்து வல்லபாய் படேல் சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. நாடு முழுவதும் இரும்பு, மணல் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மோடி 2014-ம் ஆண்டு பிரதமர் ஆனார்.
2014-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி சர்தார் வல்லபாய் படேல் சிலை தயாரிப்பு பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து படேல் சிலை தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்தன. தற்போது சிலை தயாரிப்பு பணி நிறைவு பெற்றுள்ளது.
படேல் சிலை குஜராத்தில் வதேதரா மாவட்டத்தில் சாதுபேட் எனும் இடத்தில் நர்மதா அணையை பார்த்தப் படி நிற்கும் வகையில் படேல் சிலை நிறுவப்படுகிறது.
வல்லபாய் படேல் சிலையின் மொத்த உயரம் 182 மீட்டராகும். 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள தீவில் இந்த சிலை கம்பீரமாக நிற்கப் போகிறது. இந்த சிலையை சுற்றி 12 சதுர கி.மீ. அளவுக்கு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு 182 மீட்டர் உயர வல்லபாய் படேல் சிலையை திறந்து வைக்க உள்ளார்.
படேல் சிலையை இந்திய ஒற்றுமையின் சின்னமாக அறிவிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதை கருத்தில் கொண்டு படேல் சிலை திறப்பு விழாவில் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து மாநில முதல்- மந்திரிகளையும் விழாவில் பங்கேற்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளார்.
மாநில முதல்-மந்திரிகளை நேரில் அழைக்க குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட குழுக்களை உருவாக்கியுள்ளார். #PMModi #SardarVallabhbhaiPatel

உலகின் மிக சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக மாற்ற குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ளது.

Next Story
×
X