என் மலர்
செய்திகள்
X
4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஸ்ரீநகரில் கைது
Byமாலை மலர்1 April 2019 1:42 PM IST (Updated: 1 April 2019 1:42 PM IST)
ஜம்மு காஷ்மீரில், 2015ம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதியை டெல்லி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #JKMilitantArrested
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின், இன்று காலை ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில், டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் ஃபயாஸை கைது செய்தனர். #JKMilitantArrested

இதற்கிடையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயங்கரவாதிகளுள் ஒருவனான ஃபயாஸ் அகமது லோனை டெல்லி போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்புப்படையினர் தேடி வந்தனர்.
அவன் பிடிப்படாத நிலையில், ஃபயாஸ் குறித்து துப்பு கொடுப்போருக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்தது. ஜாமீனில் வெளியே வர முடியாத வாரண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின், இன்று காலை ஜம்மு காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில், டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் ஃபயாஸை கைது செய்தனர். #JKMilitantArrested
Next Story
×
X