என் மலர்
செய்திகள்
X
தொண்டர்கள் புடைசூழ வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் ராகுல்
Byமாலை மலர்4 April 2019 11:59 AM IST (Updated: 4 April 2019 11:59 AM IST)
வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்களுடன் பேரணியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். #Congress #RahulGandhi #Wayanad
வயநாடு:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பாரம்பரிய தொகுதியான அமேதியுடன், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வயநாடு தொகுதியில் களமிறங்கும் ராகுல் காந்தி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தங்கை பிரியங்காவுடன் நேற்றே கோழிக்கோடு வந்து சேர்ந்தார்.
ராகுல்காந்தியின் வருகையால் கேரளாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அவரை பார்ப்பதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் வயநாட்டில் குவிந்திருந்தனர். அவர்கள் ராகுல் காந்தியுடன் வாகன பேரணியில் பங்கேற்றனர். ராகுல், பிரியங்கா வருகையை முன்னிட்டு வயநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுலை எதிர்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பாரத் தர்ம ஜனசேனா தலைவர் துஷார் வெல்லப்பள்ளி போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் பி.பி.சுனீர் களமிறங்கி உள்ளார். #Congress #RahulGandhi #Wayanad

இன்று காலை கோழிக்கோட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வயநாடுக்கு வந்தார் ராகுல். வேட்டி, சட்டை அணிந்து வந்த ராகுலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் நோக்கி ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்தில் பிரியங்கா மற்றும் உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். ஊர்வலம் தேர்தல் நடத்தும் அலுவலகத்தை அடைந்ததும், ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Next Story
×
X