என் மலர்
செய்திகள்
X
பா.ஜனதா எம்.எல்.ஏ. மீதான கற்பழிப்பு வழக்கு - பாதிக்கப்பட்ட இளம்பெண் நீதிபதியிடம் வாக்குமூலம்
Byமாலை மலர்12 Sept 2019 6:28 AM IST (Updated: 12 Sept 2019 6:28 AM IST)
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் நீதிபதி தர்மேஷ் சர்மா ரகசிய விசாரணை நடத்தினார்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண், கடந்த 2017-ம் ஆண்டு, பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் செங்கார் கைது செய்யப்பட்டார். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, கடந்த ஜூலை 28-ந் தேதி, அந்த இளம்பெண் சென்ற கார் மீது ஒரு லாரி மோதியது.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, லக்னோ ஆஸ்பத்திரியில் இருந்து டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்துவதற்காக, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் நேற்று தற்காலிக கோர்ட்டு அமைக்கப்பட்டது. செங்கார் எம்.எல்.ஏ.வும், அவருடைய கூட்டாளியும் அந்த தற்காலிக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணிடம் நீதிபதி தர்மேஷ் சர்மா ரகசிய விசாரணை நடத்தினார். பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டார்.

Next Story
×
X