search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவிசங்கர் பிரசாத்
    X
    ரவிசங்கர் பிரசாத்

    கா‌‌ஷ்மீர் விவகாரத்தை நேரு கையாண்ட விதம் தவறு- ரவிசங்கர் பிரசாத்

    கா‌‌ஷ்மீர் விவகாரத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட விதம் தவறு என்று மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
    ஆமதாபாத் :

    மத்திய பா.ஜனதா அரசின் 100 நாள் நிறைவை தொடர்ந்து குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது குற்றம் சாட்டினார். அவர் கூறுகையில், ‘கா‌‌ஷ்மீர் விவகாரத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கையாண்ட விதம் தவறு. கா‌‌ஷ்மீர் தொடர்பாக சர்தார் படேல் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் சரி. அந்த காலத்தில் அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ஏற்படுத்தி வரலாற்று பிழையை செய்திருந்தனர். ஆனால் மகத்தான துணிச்சலுடன் அந்த சட்டப்பிரிவை நீக்கி நமது பிரதமர் மோடி வரலாற்று பிழையை சரி செய்து விட்டார்’ என்று தெரிவித்தார்.

    கா‌‌ஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு ஒரு தோட்டா கூட சுடப்படவில்லை எனக்கூறிய ரவிசங்கர் பிரசாத், மாநிலம் முழுவதும் போடப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது பெரும்பாலான பகுதிகளில் விலக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
    Next Story
    ×