search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான பஸ்
    X
    விபத்துக்குள்ளான பஸ்

    மகாராஷ்டிராவில் விபத்து: பஸ்- கண்டெய்னர் மோதி 6 பேர் பலி

    மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
    புனே:

    மும்பையில் இருந்து கர்நாடகா மாநிலம் பெலகாவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் சென்றது. இன்று அதிகாலை 5 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் சுபாரா மாவட்டத்துக்குட்பட்ட மாசேவ் கிராம பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதனால் பஸ்சுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் பதறினர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    கண்டெய்னர் லாரி மீது பஸ் மோதிய காட்சி.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×