என் மலர்
செய்திகள்
X
சத்தீஸ்கரில் பொது கழிப்பறையில் சிறுமி கற்பழிப்பு
Byமாலை மலர்19 Dec 2019 11:27 AM IST (Updated: 19 Dec 2019 11:27 AM IST)
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே பொது கழிப்பறையில் 10 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள திக்ரபாரா பகுதியில் பலரது வீடுகளிலும் கழிப்பறை கிடையாது. அங்குள்ள பொது கழிப்பறையைத்தான் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு அப்பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, யாரும் இல்லாத நேரத்தில் பொது கழிப்பறைக்கு சென்றுள்ளார். இதனை அப்பகுதியை சேர்ந்த இந்திரஜித் பார்தி (21) என்பவர் கவனித்து, கழிப்பறைக்கு சென்று, அந்த சிறுமியை கற்பழித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினாள். அதிர்ச்சிடைந்த அவர்கள் போலீசில் புகார் செய்தனர் அதன்பேரில் இந்திரஜித் பாரதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ராய்ப்பூர் அருகே உள்ள அம்பிகாபூர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று இவருடன் படித்து வரும் மாணவர் ஒருவரை அழைத்து செல்வதற்காக அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார்.
30 வயதான அவர் தனது மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிய பின்பு, அங்கு நின்ற சிறுமியையும் என்னுடன் வா, உன் வீட்டில் இறக்கிவிடுகிறேன் என்று அழைத்தார். அவருடன் தனது தோழனும் இருக்கிறான் என்ற தைரியத்தில் சிறுமி மோட்டார் சைக்கிளில் ஏறினாள்.
தனது வீட்டுக்கு சென்றதும் சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்ற வாலிபர் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சத்தம் போட்டு கதறினார். மிரட்டிய அவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றி சிறுமியின் வீட்டின் அருகே இறக்கிவிட்டுவிட்டு தப்பி சென்றார். நடந்த சம்பவத்தை சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார்.
அவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதனடிப் படையில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபரை கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Next Story
×
X