என் மலர்
செய்திகள்
X
கொரோனா சிகிச்சைக்காக 5 மாநிலங்களுக்கு 960 ரெயில் பெட்டிகள் ஒதுக்கீடு
Byமாலை மலர்18 Jun 2020 1:03 PM IST (Updated: 18 Jun 2020 1:03 PM IST)
கொரோனா சிகிச்சைக்காக முதல்கட்டமாக, 5 மாநிலங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், அவற்றுக்கு 960 ரெயில் பெட்டிகளை ரெயில்வே நிர்வாகம் ஒதுக்கிக் கொடுத்துள்ளது.
புதுடெல்லி:
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகளுடன் ஆயிரக்கணக்கான ரெயில் பெட்டிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் ஆஸ்பத்திரி படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு பயன்படுத்துவதற்காக, இவை இருப்பில் வைக்கப்பட்டன.
இந்நிலையில், முதல்கட்டமாக, 5 மாநிலங்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், அவற்றுக்கு 960 ரெயில் பெட்டிகளை ரெயில்வே நிர்வாகம் ஒதுக்கிக் கொடுத்துள்ளது.
டெல்லிக்கு மட்டும் 503 பெட்டிகள் அளிக்கப்பட்டுள்ளன. 9 ரெயில் நிலையங்களில் அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோல், உத்தரபிரதேசத்துக்கு 372 பெட்டிகளும், தெலுங்கானாவுக்கு 60 பெட்டிகளும், ஆந்திராவுக்கு 20 பெட்டிகளும், மத்தியபிரதேசத்துக்கு 5 பெட்டிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இப்பெட்டிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள், போர்வைகள், கொசு வலைகள், குளியலறைகள், சார்ஜ் ஏற்றும் பாயிண்ட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

Next Story
×
X