search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெண் ராணுவ அதிகாரிகள் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம்

    இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணியில் உள்ள பெண் அதிகாரிகள் ஓய்வுக்காலம் வரை பணியாற்ற பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
    டெல்லி:

    சவால்கள் நிறைந்த இந்திய ராணுவ படையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணியில் உள்ள பெண் அதிகாரிகள் அவர்களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்ற பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

    இதன் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்திய ராணுவத்தின் அனைத்துப் பத்து பிரிவுகளிலும் குறுகிய கால பணியில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஓய்வுக்காலம் வரை பணியாற்றும் அனுமதியை இந்த ஆணை வழங்குகிறது.

    ராணுவ விமானப்பாதுகாப்பு (AAD), சிக்னல்கள், பொறியாளர்கள், ராணுவ விமானப்போக்குவரத்து, மின்னணுவியல் மற்றும் இயந்திரப் பொறியாளர்கள் (EME), ராணுவச் சேவைப்படை (ASC), ராணுவ தளவாடப்படை (AOC) மற்றும் புலனறிவுப்படை ஆகிய பிரிவுகளோடு தற்போது இருக்கும் நீதிபதி மற்றும் அட்வகேட் ஜெனரல் (JAG) மற்றும் ராணுவக் கல்விப்படை ஆகிய பிரிவுகளிலும் இனி பெண் அதிகாரிகள் தங்களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம்.

    இந்திய ராணுவம் இந்திய நாட்டுக்காக சேவை செய்வதில் பெண் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதில் உறுதிப்பாட்டுடன் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    குறுகிய கால பணியில் உள்ள அனைத்து பெண் அதிகாரிகளும் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம் என்ற தங்கள் வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து தேவைப்படும் ஆவணங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த உடனேயே தேர்வு வாரியத்தின் கால அட்டவணை வெளியிடப்படும்

    இதன்மூலம் ராணுவத்தில் மிகப்பெரும் பொறுப்புகளை ஏற்பதற்கான அதிகாரம் பெண் அதிகாரிகளுக்குக் கிடைக்கிறது. 
    Next Story
    ×