என் மலர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,895 பேருக்கு தொற்று
Byமாலை மலர்23 July 2020 8:50 PM IST (Updated: 23 July 2020 8:50 PM IST)
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. நாட்டிலேயே வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொடர்பான நேற்றைய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அந்த தகவலின்படி, மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மேலும் 298 பேர் உயிரிழந்த நிலையில், தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,854 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 484 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 94 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.

Next Story
×
X