என் மலர்
செய்திகள்
X
அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு ஷாருக் கான் ரூ. 5 கோடி வழங்கியதாக வைரலாகும் தகவல்
Byமாலை மலர்7 Aug 2020 9:39 AM IST (Updated: 7 Aug 2020 9:39 AM IST)
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு ஷாருக் கான் ரூ. 5 கோடி நிதி உதவி வழங்கி உள்ளதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோவிலுக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். ராமர் கோவில் பூமிபூஜை துவங்க சில நாட்களுக்கு முன் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு நன்கொடை வழங்க கோவில் நிர்வாகம் சார்பில் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு ரூ. 5 கோடி நிதி உதவி வழங்கி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. வைரல் தகவல்களுடன் ஷாருக் கான் மற்றும் கோவில் வரைபடத்தின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
வைரல் பதிவுகளில் ஷாருக் கான் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு ரூ. 5 கோடி நிதி உதவியை ராமர் கோவில் டிரஸ்டிற்கு வழங்க உத்தரவிட்டு இருப்பதாக ஷாருக் கான் நிறுவனமான ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மூத்த மேலாளர் ஒருவர் தெரிவித்து இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.
எனினும், ஷாருக் கான் நிதி உதவி வழங்க கூறியாக வைரலாகும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு நடிகர் ஷாருக் கான் நிதி உதவி வழங்கியதாக வைரலாகும் தகவலில் உண்மையில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
X