என் மலர்
செய்திகள்
X
கேரளாவில் அதிக அளவாக ஒரே நாளில் 1420 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்9 Aug 2020 3:43 AM IST (Updated: 9 Aug 2020 3:43 AM IST)
கேரளாவில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளா மாநிலத்தில் மேலும் 1,420 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தில் ஒரே நாளில் 1,420 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 33,120 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Next Story
×
X