என் மலர்
செய்திகள்
X
மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
Byமாலை மலர்13 Aug 2020 9:33 AM IST (Updated: 13 Aug 2020 9:33 AM IST)
மும்பையில் தனியார் நிறுவன ஊழியர்களுக்காகவும் மின்சார ரெயிலை இயக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
மும்பை :
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. இதில் மும்பையில் பயணிகளின் உயிர் நாடியான மின்சார ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் மராட்டிய அரசின் வேண்டுகோளை ஏற்று அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்காக மட்டும் மும்பையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிக்க அரசு ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.
மின்சார ரெயிலில் பயணிக்க அனுமதி இ்ல்லாததால், தனியார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபேயிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ரெயில்களை இயக்குவது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு எடுக்கும். அதேநேரத்தில் மும்பையில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்காக மேலும் சில மின்சார ரெயில்களை இயக்குவது அவசியம் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளோம்.
மேலும் முக கவசம் மற்றும் சானிடைசர்கள் மலிவான விலைக்கு மக்களுக்கு கிடைக்க அரசு இன்னும் 4 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும், அதன் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்தார்.
கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.1,900 ஆக குறைக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.

Next Story
×
X