search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்
    X
    கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

    கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா தொற்று- வீட்டுத் தனிமையில் உள்ளார்

    கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
    பனாஜி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத் துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நலப் பணிகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தனது பணிகளை வீட்டில் இருந்தபடியே மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அறிகுறி எதுவும் இல்லாமல் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் பிரமோத் சாவந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
    Next Story
    ×