search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.
    X
    ஜி.எஸ்.டி.

    2018-19-ம் நிதியாண்டின் ஜி.எஸ்.டி. தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு - மத்திய அரசு நடவடிக்கை

    2018-19-ம் நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி. தாக்கல் மற்றும் தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தலுக்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டித்து உள்ளது.
    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள வணிகர்கள் கடந்த 2018-19-ம் நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி. தாக்கல் மற்றும் தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தலுக்கான காலக்கெடுவை இந்த மாதம் 31-ந்தேதி வரை மத்திய அரசு நீட்டித்திருந்தது. கொரோனா பரவலால் மக்கள் சந்தித்து வரும் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தளர்வை மத்திய அரசு வழங்கியது.

    ஆனால் நாட்டில் கொரோனா அலை இன்னும் ஓயாத நிலையில் ஊரடங்கு, கட்டுப்பாடுகள் போன்றவற்றால் வழக்கமான வர்த்தக நடவடிக்கைகள் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து முடங்கியே கிடக்கிறது. எனவே இந்த காலக்கெடுவை மீண்டும் நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன. இதைத்தொடர்ந்து இந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

    இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, 2018-19-ம் நிதியாண்டுக்கான ஜி.எஸ்.டி. தாக்கல் மற்றும் தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தலுக்கான காலக்கெடுவை டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டித்து உள்ளது. இந்த தகவலை மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது.
    Next Story
    ×