என் மலர்
செய்திகள்
X
மந்திரி தனஞ்செய் முண்டே மீது போலீசில் பெண் புகார்
Byமாலை மலர்5 Feb 2021 7:18 AM IST (Updated: 5 Feb 2021 7:18 AM IST)
மந்திரி தனஞ்செய் முண்டே மீது பெண் ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவருடன் தனக்கு பிறந்த பிள்ளைகளை பார்க்க விடாமல் தடுப்பதாக அதில் தெரிவித்து உள்ளார்.
மும்பை :
மராட்டிய சமூகநீதி துறை மந்திரி தனஞ்செய் முண்டே மீது சமீபத்தில் பாடகி ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். இதையடுத்து மந்திரி, புகார் அளித்த பெண்ணின் குற்றச்சாட்டை மறுத்தார். அதே நேரத்தில் புகார் அளித்த பாடகியின் சகோதரியுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், அந்த தொடர்பின் காரணமாக ஒரு மகன், மகள் உள்ளனர் எனவும் தெரிவித்து இருந்தார். இதற்கிடையே மந்திரி மீது பாலியல் புகார் அளித்த பெண் சமீபத்தில் அதை திரும்ப பெற்று இருந்தார்.
இந்தநிலையில் மந்திரி தனஞ்செய் முண்டேவுடன் உறவில் இருந்த பெண் மும்பை போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
மந்திரி தனஞ்செய் முண்டே தென்மும்பையில் உள்ள அரசு பங்களாவில் மகன், மகளை அடைத்து வைத்து உள்ளார். கடந்த 3 மாதங்களாக அவர் பிள்ளைகளை பார்க்கவோ அல்லது பேசவோ என்னை அனுமதிக்கவில்லை. ராவணன் கூட இதுபோல சித்தரவதை செய்து இருக்க மாட்டார். எனது 14 வயது மகள் அங்கு பாதுகாப்பாக இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல அந்த பெண் தனது பேஸ்புக் பதிவில், "போலீசார் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் வருகிற 20-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் " என கூறியுள்ளார்.
இந்தநிலையில் பெண்ணின் புகார் குறித்து மந்திரி தனஞ்செய் முண்டே அளித்துள்ள பதிலில், " என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் உண்மையில்லை " என கூறியுள்ளார்.

Next Story
×
X