என் மலர்
செய்திகள்
X
மார்ச் 1-ந்தேதி முதல் உ.பி.யில் 1 முதல் 5-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறப்பு
Byமாலை மலர்5 Feb 2021 6:31 PM IST (Updated: 5 Feb 2021 6:31 PM IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் 6 முதல் 8-ம் வகுப்புக்கான பள்ளிகள் வருகிற 10-ந்தேதி திறக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இந்தியாவில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புக்கு ஏற்ப பள்ளிகள் திறக்கப்பட்டன.
பெரும்பாலான மாநிலங்களில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் முதலில் திறக்கப்பட்டன. அதன்பின் தற்போது 9 மற்றும் 11-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் வருகிற 10-ந்தேதி தொடங்கப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
Next Story
×
X