search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லூக் மாண்டேக்னியர்
    X
    லூக் மாண்டேக்னியர்

    தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்

    பிரெஞ்சு ஆய்வாளர் இவர்கள் உயிரிழந்துவிடுவார்கள் என கூறியதாக சமூக வலைதளங்களில் பகீர் தகவல் வைரலாகி வருகிறது.


    இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா ஒருபக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்படுகின்றன.

    பிரெஞ்சு நாட்டை சேர்ந்த நோயியல் வல்லுநர் மற்றும் நோபல் பரிசு வென்றவருமான லூக் மாண்டேக்னியர் கூறியதாக பகீர் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டே ஆண்டுகளில் உயிரிழந்திடுவார்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    வைரல் பதிவுகளுடன் லூக் நேர்காணல் வீடியோவும் இடம்பெற்று இருக்கிறது. வீடியோவில் லூக் பெருந்தொற்று காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் முறையை பற்றி கேள்வி எழுப்புகிறார். "கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் தான் உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்கள், பெருந்தொற்று காலக்கில் தடுப்பூசி போடுவது நினைத்து பார்க்க முடியாத தவறு."

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    "உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி போட துவங்கியபின் உருமாறிய கொரோனா தீவிரம் அடைவதும், பெருந்தொற்று அதிகமாவது, மரணங்கள் கூடுவதும் நடக்கிறது. நோயியல் வல்லுநர்கள் தெரிந்தும் அமைதி காக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இது பதிவாகும்," என அவர் கூறுகிறார். 

    இந்த வீடியோ, "தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள். நோபல் பரிசு வென்ற லூக் மாண்டேக்னியர் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதிர வைக்கும் நேர்காணலில், உலகின் முன்னணி நோயியல் வல்லுநர் இவ்வாறு கூறியிருக்கிறார். இனியும் நம்பிக்கையில்லை." எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பெருந்தொற்று காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் முறையை லூக் மாண்டேக்னியர் கேள்வி எழுப்புகிறார். மேலும் இது மருத்துவ பிழை என குறிப்பிடுகிறார். எனினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள் என அவர் கூறவே இல்லை. 

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×