என் மலர்
செய்திகள்
X
காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
Byமாலை மலர்28 Jun 2021 11:32 PM IST (Updated: 28 Jun 2021 11:32 PM IST)
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக எதிர்பாராத வகையில் திடீரென தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
ஸ்ரீநகர்:
ஜம்மு விமானப்படை தளத்தில் நேற்று அடுத்தடுத்து 2 முறை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹரிபரிகம் என்ற கிராமத்தில் நேற்று இரவு முன்னாள் போலீஸ் அதிகாரி பயஸ் அகமது, மனைவி ராஜ பேகம் ஆகியோரை பயங்கரவாதிகள் வீடு புகுந்து சுட்டுக் கொன்றனர்.
முன்னாள் போலீஸ் அதிகாரியை சுட்டுவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதியை ராணுவ வீரர்கள் தேடி வருகின்றனர். அந்தப் பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் மல்ஹூரா பரிம்போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாதிகளை ஒழிக்கும் அதிரடி வேட்டையில் இன்று ஈடுபட்டனர். அங்கு வசித்து வரும் பொதுமக்களை வெளியேற்றி வேறு இடங்களுக்கு செல்லும்படி வீரர்கள் அனுப்பி வைத்தனர்.
இதனால் என்னவென்று தெரியாத மக்கள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு குடும்பத்துடன் வெளியேறி பாதுகாப்புப் பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு பயங்கரவாத தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீநகரின் மல்ஹூரா பரிம்போரா பகுதியில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த மோதலில் உதவி கமாண்டர், உதவி ஆய்வாளர் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
Next Story
×
X