என் மலர்
இந்தியா
X
கொரோனா காலத்தில் பள்ளி சீருடைக்கு ரூ.351 கோடி செலவு- உயர்மட்ட விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை
Byமாலை மலர்8 March 2022 2:29 PM IST (Updated: 8 March 2022 4:07 PM IST)
சுய உதவி குழுக்கள் இந்த சீருடைகளை தயாரித்தது. கொரோனா நெறிமுறைக்கு இணங்க பள்ளி நிர்வாகக் குழு மூலம் சீருடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ பஞ்சிலால் மேதா கொரோனா தொற்றின்போது பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பள்ளி சீருடைகளின் மதிப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.
மேலும், சீருடை விநியோகப் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர் கூறியதாவது:-
அப்போது, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும், 9-ம முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளவர்கள் எங்கள் வீடு எங்கள் பள்ளி திட்டத்தின் கீழ் படித்து வந்தனர்.
மேலும், சுய உதவி குழுக்கள் இந்த சீருடைகளை தயாரித்தது. கொரோனா நெறிமுறைக்கு இணங்க பள்ளி நிர்வாகக் குழு மூலம் சீருடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக வரும் புகார்கள் சுய உதவிக்குழுக்களைக் கட்டுப்படுத்தும் துறையால் கவனிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. உக்ரைன்- ரஷியா சண்டை முடிந்தபின் மாணவர் உடல் இந்தியா கொண்டு வரப்படும்: கர்நாடக மாநில முதல்வர்
Next Story
×
X