என் மலர்
இந்தியா
X
இந்தியாவில் கொரோனா நிலவரம்: 2-வது நாளாக ஆயிரத்துக்கு மேல் பதிவான தினசரி பாதிப்பு
Byமாலை மலர்7 April 2022 10:38 AM IST (Updated: 7 April 2022 11:37 AM IST)
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,222 பேர் குணம் அடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரத்து 789 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் புதிதாக 1,033 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
கடந்த 4-ந் தேதி பாதிப்பு 913 ஆகவும், மறுநாள் 795 ஆகவும் இருந்தது. 2 நாட்களுக்கு பிறகு நேற்று பாதிப்பு சற்று உயர்ந்து 1,086 ஆக பதிவானது.
இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அதேநேரம் நேற்றைய பாதிப்பை விட சற்று குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 31 ஆயிரத்து 958 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் மேலும் 42 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட 32 மரணங்கள் அடங்கும். இதுதவிர மகாராஷ்டிராவில் 7, கர்நாடகா, மேற்கு வங்கம், டெல்லி, திரிபுராவில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,21,530 ஆக உயர்ந்தது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,222 பேர் குணம் அடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரத்து 789 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 11,639 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 232 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை 185 கோடியே 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 15,37,314 டோஸ்கள் அடங்கும்.
இதற்கிடையே நேற்று 4,82,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 79.25 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Next Story
×
X