என் மலர்
இந்தியா

30 பெண்களுக்கு தொடர் பாலியல் கொடுமை.. பரவிய 100 ஆபாச வீடியோ - சிக்கிய மெடிக்கல் கடை ஓனர்

- பண உதவி செய்வதாக ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- ஆபாச வீடியோக்கள் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகாவில் பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தாவாங்கரே மாவட்டத்தில் சன்னகிரி நகரில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் அம்ஜத். இவர் தனது கடைக்கு வந்த பெண்களுக்கு பண உதவி செய்வதாக ஏமாற்றி தனக்கு சொந்தமான வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குடும்பத்துடன் வசித்து வரும் அம்ஜத், இதற்கென்றே தனியாக ஒரு வீட்டை வைத்திருந்துள்ளார்.
மேலும் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அந்த பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தார்.
இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் சென்னகிரி போலீசிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்திடமும் புகார் செய்தனர். அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டார்.
வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் 30 பெண்களை அம்ஜத் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதில் ஒரு சிறுமியும் அடங்குவார்.
அவரது செல்போனில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றினர். தனது கடைக்கு வரும் பெண்கள், சாலையில், பஸ்ஸில் என பொது இடங்களில் நடமாடும் பெண்களையும் அஜ்மத் படம்பிடித்து வைத்திருக்கிறார்.
ஆபாச வீடியோக்கள் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோக்களை யாரும் பகிர கூடாது என்றும் மீறி பகிர்ந்தால் கடுமையான நடவைடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் எச்சரித்துள்ளார்.