என் மலர்
இந்தியா

ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்ட 4 வாலிபர்கள்
- ரெயில் விபத்து நடந்தபோது 4 பேரில் ஒருவர் ரெயிலின் ஒருபுறம் உள்ள வாசல் வழியாக வெளியே குதித்தார்.
- ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர்.
பாலாசோர்:
ஒடிசா மாநிலம் பாலசோர் ரெயில் நிலையத்தில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வாலிபர்கள் ரகு, கிரண், வைசாக், விஜிஷ் ஆகியோர் பயணம் செய்தனர். அவர்கள் சென்னை வந்து கேரளா செல்ல திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக ரெயில் விபத்தில் சிக்கி கொண்டனர். இதில் 4 பேரும் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.
ரெயில் விபத்து நடந்தபோது 4 பேரில் ஒருவர் ரெயிலின் ஒருபுறம் உள்ள வாசல் வழியாக வெளியே குதித்தார். மற்ற 3 பேரும் மறுபுறம் உள்ள வாசல் வழியாக தப்பினர்.
பின்னர் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து விபத்துக்குள்ளான ரெயிலில் சிக்கிகொண்ட பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனர். அவர்களுக்கு அந்த பகுதி மக்களும் உதவி செய்தனர். விபத்தில் சிக்கிய பயணிகள் படுகாயம் அடைந்து வலியால் அலறிய சத்தம் நெஞ்சை உலுக்குவதாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.