என் மலர்
இந்தியா
ஜெய்ப்பூரில் வடிவமைக்கப்பட்ட 51 இன்ச் குழந்தை வடிவிலான ராமர் சிலை அயோத்தி சென்றடைந்தது
- வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
- பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரபல தலைவர்கள், சாதனையாளர்கள், விருது பெற்றவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கோவில் கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை நிறுவப்பட இருக்கிறது. மேலும், கோவிலை சுற்றி அவரது சிலைகள் வைக்கப்பட இருக்கிறது.
ராமர் கோவிலில் வைக்கப்பட இருக்கும் சிலைகள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள தலைசிறந்த சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சிற்பி 51 இன்ஞ் உயரமுள்ள குழந்தை வடிவிலான ராமர் சிலையை வடிவமைத்துள்ளார்.
இந்த சிலை நேற்று உத்தர பிரதேசம் சென்றுள்ளது. கும்பாபிஷேக விழா வருகிற 16-ந்தேதி முதல் தொடங்க இருக்கிறது.
இதனால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அயோத்திக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வர இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.