search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒடிசா கடற்கரையில் குவிந்த 7 லட்சம் ஆமைகள்
    X

    ஒடிசா கடற்கரையில் குவிந்த 7 லட்சம் ஆமைகள்

    • ஆமைகள் நவம்பர் முதல் மார்ச் இறுதி வரை முட்டையிடும்.
    • ஒவ்வொரு ஆமையும் 50 முதல் 100 முட்டைகள் இடும்.

    ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கஹிர்மத் கடற்கரைக்கு 12 நாட்களில் சுமார் 7 லட்சம் ஆலிவ் ரிட்லி ஆமைகள் வந்துள்ளன. வரிசையாக ஆமைகள் குவிந்து கிடக்கின்றன.

    இது அங்குள்ள பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து இந்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி ஜி.வி ஏ பிரசாத் கூறுகையில்:-

    இந்த ஆமைகள் நிலவொளி இரவுகளில் முட்டையிட விரும்புகின்றன. அட்லாண்டிக் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து இங்கு வந்துள்ளன.

    ஒவ்வொரு ஆமையும் 50 முதல் 100 முட்டைகள் இடும். அவற்றைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஆமைகள் நவம்பர் முதல் மார்ச் இறுதி வரை முட்டையிடும் அதனால் கடற்கரையில் மீன்பிடிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இன்னும் லட்சம் ஆமைகள் வரக்கூடும் என்றார்.

    Next Story
    ×