search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பஞ்சாபில் லாரி மீது வேன் மோதி கோர விபத்து.. 9 பேர் பலி
    X

    பஞ்சாபில் லாரி மீது வேன் மோதி கோர விபத்து.. 9 பேர் பலி

    • 20 பேர் ஜலாலாபாத் நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கசென்டுற்கொண்டிருந்தனர்.
    • ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளார்.

    பஞ்சாபில் இன்று காலை லாரியும் வேனும் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

    பஞ்சாபில் பெரோஷ்பூர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் ஜலாலாபாத் நகரில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை வேனில் சென்றுகொண்டிருந்தனர்.

    பெரோஷ்பூர் -பாசில்கா நெடுஞ்சாலையில் கொல்காமவுர் கிராம் அருகே காலை 7.45 மணியளவில் வாகனம் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளார். இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×