search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆன்மீக சுற்றுலா சென்ற சொகுசு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 5 பேர் பலி - பலர் படுகாயம்
    X

    ஆன்மீக சுற்றுலா சென்ற சொகுசு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து.. 5 பேர் பலி - பலர் படுகாயம்

    • பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு 48 பக்தர்களுடன் சொகுசு பேருந்து ஒன்று ஆன்மீக சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளது.
    • கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    குஜராத்தில் சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

    பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு 48 பக்தர்களுடன் சொகுசு பேருந்து ஒன்று ஆன்மீக சுற்றுலாவுக்கு புறப்பட்டுள்ளது.

    இன்று காலை 4.15 மணியளவில் டாங் மாவட்டத்தில் சபுதாரா மலைப் பிரதேச சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 17 பேர் தீவிர காயங்களுடன் அஹ்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் லேசான காயங்களுடன் தப்பினர். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    Next Story
    ×