என் மலர்
இந்தியா
திருப்பதி அருகே இரும்பு தொழிற்சாலையில் தீவிபத்து
- கொதிக்கலனில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- மற்ற தொழிலாளர்களின் விவரத்தை தெரிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், பென்னேபள்ளியில் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் உலை கொதிக்கலனில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் அப்பகுதியில் வேலை செய்து கொண்டுடிருந்த 7 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். தீ விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் போலீசார் தீ விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு நாயுடு பேட்டை மற்றும் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து உள்ளூர் பொதுமக்கள் கூறுகையில்:-
தொழிற்சாலையில் இரவு பணியில் பீகாரை சேர்ந்த 50 தொழிலாளர்கள் வேலை செய்வது வழக்கம். ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் 7 பேர் மட்டும் காயம் அடைந்ததாக தெரிவிக்கின்றனர்.
இரவு பணியில் இருந்த மற்ற தொழிலாளர்களின் விவரத்தை நிர்வாகம் தெரிவிக்காமல் ரகசியம் காத்து வருகிறது. இதனால் மற்ற தொழிலாளர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை என்றனர். தீயில் தொழிலாளர்கள் சிக்கினார்களா? என ஆய்வு செய்தனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.