என் மலர்
இந்தியா
அதிகாலையில் போலீஸ் ஸ்டேஷனில் கேட்ட பயங்கர சத்தம்.. மக்கள் பீதி - நடந்தது இதுதான்
- இதனால் அதிகாலை முதல் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது
- காவல் நிலையத்தில் கேட்ட பயங்கர சத்தம் குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமாபாத் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பீதியில் உறைந்தனர்.
காவல் நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதாக நினைந்து உள்ளூர் மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அதிகாலை முதல் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது
இந்நிலையில் காவல் நிலையத்தில் கேட்ட பயங்கர சத்தம் குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.
#WATCH | Punjab: A blast-like noise was heard at Islamabad Police Station in #Amritsar today around 3 am. As per the Police, no damage or injuries have been reported. pic.twitter.com/qODNEBtGxf
— TIMES NOW (@TimesNow) December 17, 2024
வெடி விபத்து எதுவும் நிகழவில்லை என்றும், காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள தற்காலிக சோதனை சாவடியின் இரும்பு ஷீட்டினால் மேற்கூரை மீது கனமான பொருள் விழுந்ததால் அந்த சத்தம் எழுந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அவர்கள் விளக்கம் அளித்தனர்.