என் மலர்
இந்தியா
ஏற்கனவே 7 பிள்ளைகள் உள்ள நிலையில் 8-வது பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற பெண்
- 2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தேவாவின் மனைவி 10 குழந்தைகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- குடும்ப கட்டுப்பாடு குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தாததே அவர் 10 குழந்தைகள் பெற்றதற்கு காரணம்.
திருப்பதி:
சதீஷ்கர் மாநிலம் பிஜப்பூர், உசூர் பழங்குடியினத்தை சேர்ந்தவர் தேவா. இவரது மனைவி போஜ்ஜா.போஜ்ஜாவுக்கு ஏற்கனவே 4 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
தேவா தனது மனைவியுடன் ஆந்திர மாநிலம் பத்ராசலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.
மீண்டும் கர்ப்பமான போஜ்ஜா பிரசவத்திற்காக கடந்த 2-ந் தேதி பத்ராசலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். போஜ்ஜாவுக்கு இது 8-வது பிரசவம் ஆகும்.
அங்கு போஜ்ஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அவரது ஹீமோகுளோபின் அளவு 5.1 கிராம் இருப்பதால் பிரசவத்தில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் போஜ்ஜா வயிற்றில் 3 குழந்தைகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பின்னர் சுகப்பிரசவத்தில் போஜ்ஜாவுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தேவாவுக்கு 5 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என 10 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது என அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தேவாவின் மனைவி 10 குழந்தைகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போஜ்ஜாவுக்கு ஏற்கனவே பிரசவம் பார்த்த டாக்டர்கள் குடும்ப கட்டுப்பாடு குறித்து அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தாததே அவர் 10 குழந்தைகள் பெற்றதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.