என் மலர்
இந்தியா
X
மேம்பாலத்தில் சென்ற போது விபத்து - உயிர்தப்பிய 20 பயணிகள்
Byமாலை மலர்18 May 2024 2:58 PM IST
- ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
- டிரைவர், கண்டக்டர் மற்றும் 6 பயணிகள் காயம் அடைந்தனர்.
கர்நாடகாவில் அரசு பேருந்து ஒன்று துமகுரு சாலையில் நெலமங்களா அருகே மதநாயக்கனஹள்ளி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் இருந்து சோம்வார்பேட்டைக்கு கர்நாடக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 20 பயணிகள் பயணித்துள்ளனர்.
துமகுரு சாலையில் நெலமங்களா அருகே மதநாயக்கனஹள்ளி என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பஸ் சென்றுகொண்டிருந்த போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் முட்டி விபத்துக்குள்ளானது.
இதில் டிரைவர், கண்டக்டர் மற்றும் 6 பயணிகள் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நெலமங்களா போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
X