என் மலர்
இந்தியா
நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற கவுதம் அதானியின் மகன் திருமணம்
- பிரபலங்கள் உள்ளிட்ட யாரும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை.
- உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு.
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரும், ஆசியாவின் 2-வது பணக்காரராகவும் திகழ்பவர் கவுதம் அதானி. இவரது இளைய மகன் ஜீத் மற்றும் திவா ஷா ஆகியோருக்கு திருமணம் நிச்சயம் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்று நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்ட நிலையில் திருமணம் நடைபெற்றது.
ஜெயின் முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு எந்த பிரபலங்களும் அழைக்கப்படவில்லை. அதானி குழுமத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கான வரவேற்பு நாளை நடைபெற இருக்கிறது.
திருமணத்தை முன்னிட்டு பல்வேறு சமூக சேவைகளுக்கான 10 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக வழங்குவதாக கவுதம் அதானி உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பான அதானி வெளியிட்டுள்ள பதிவில் "எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன், ஜீத்தும் திவாவும் இன்று திருமணத்தின் புனிதமான முடிச்சை பதிவு செய்தனர். இந்த திருமணம் மிகவும் எளிமையான மற்றும் தனிப்பட்ட விழா. ஆகவே, நாங்கள் விரும்பினாலும் கூட, அனைத்து நலம் விரும்பிகளையும் அழைக்க முடியவில்லை. அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திருமணத்தின் படங்களை வெளியிட்டு, புதுமண தம்பதியினருக்கு ஆசீர்வாதங்களையும் அன்பையும் கோரினார். அதானிக்கு கரண், ஜீத் என இரண்டு மகன்கள். மூத்த மகன் பரிதி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் வழக்கறிஞர் மற்றும் சிரில் அமர்சந்த் மங்கல்தாஸின் பார்ட்னர் ஆவார்.
2-வது மகன் ஜீத் தற்போது திவாவை திருமணம் செய்துள்ளார். திவா டைமண்ட் வியாபாரியின் மகள் ஆவார்.