search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு
    X

    ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

    • மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
    • இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறக்கிறார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    நாளை(16-ந்தேதி) முதல் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடைபெறும். இதனால் பக்தர்கள் நாளை முதல் வருகிற 20-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த முறையும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படு கிறது.

    இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படு கிறார்கள். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் தினமும் அதிகாலை 5.20 மணி முதல் காலை 10 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாதாந்திர பூஜை முடிந்து 20-ந்தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    Next Story
    ×