என் மலர்
இந்தியா

வாரம் 90 மணி நேரம் வேலை - யோசனை மனிதர்களுக்கா, ரோபோக்களுக்கா? அகிலேஷ் யாதவ்

- யோசனை மனிதர்களுக்கா அல்லது ரோபோக்களுக்கா?
- குடிமகனுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.
இந்தியாவில் தொழிலாளர்கள் "வாரம் 90 மணி நேரம் வேலை" என்று வாதிடுவோரை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். மேலும், இத்தகைய யோசனை மனிதர்களுக்கா அல்லது ரோபோக்களுக்கா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலையின் தரம், அதன் அளவை விட மிக முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து பேசும் போது, "மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் வாழ விரும்புகிறார்கள். ஒருசிலர் தான் பொருளாதார வளர்ச்சியால் பலன் அடைகிறார்கள். பொருளாதாரம் 30 டிரில்லியன் டாலர்களை எட்டுகிறதா அல்லது 100 டிரில்லியன் டாலர்களை எட்டுகிறதா என்பது சாதாரண குடிமகனுக்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது," என்று கூறினார்.
"பொழுதுபோக்கு மற்றும் திரைப்படத் துறை பொருளாதாரத்திற்கு பில்லியன் கணக்கான பங்களிப்பை வழங்குகிறது. இது மக்கள் புத்துணர்ச்சியுடனும், புத்துயிர் பெற்றவர்களாகவும், மீண்டும் உற்சாகமாகவும் உணர உதவுகிறது, இது இறுதியில் வேலை தரத்தை மேம்படுத்துகிறது," என்று அவர் மேலும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நீண்ட வேலை நேரத்தை பரிந்துரைப்பவர்கள் தங்கள் இளமை பருவத்தில் இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றினார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசும் போது, "90 மணி நேர வேலையை ஆதரிப்பவர்கள், உண்மையிலேயே வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்திருந்தால், நமது பொருளாதாரம் ஏன் இந்த நிலையை மட்டுமே எட்டியுள்ளது?" என்றார்.