என் மலர்
இந்தியா

தொழில்நுட்ப கோளாறால் ஆந்திர முதல் மந்திரி சென்ற விமானம் அவசர தரையிறக்கம்
- ஆந்திர முதல் மந்திரி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
- இதனால் அந்த விமானம் கன்னாவரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமராவதி:
ஆந்திர மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவர் தலைநகர் டெல்லி செல்வதற்காக நேற்று தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிருஷ்ணா மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கன்னாவரம் விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட தயாரானது. அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமானி தெரிவித்தார். இதையடுத்து. அந்த மீண்டும் அதே விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டது.
முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story